Thursday, 2 October 2014

அணிகலன் அணிவதால் ஏற்படும் பயன்கள்


பொட்டு
பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது....

தோடு
மூளையின் செயல் திறன்அதிகரிக்கும். ண்பார்வை திறன் கூடும் . 
நெற்றிச்சுட்டி
நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது.
மோதிரம்
பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது.. ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும்.
செயின்,நெக்லஸ்
கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும்.
வங்கி 
கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம், படபடப்பு, பயம் குறைகிறது .மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே உருதிபடுதப்படிருகிது
வளையல் 
வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது.முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது.இதன் மூலம்
தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

லம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது இல்லை.காரணம் மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல்வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரத்த ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது.
ஒட்டியாணம்
ஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக
தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும்.வயிற்று பகுதிகள் வலுவடையும்.
மூக்குத்தி
மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும்
சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்னு உண்டு.அந்த புள்ளிகள் தூண்டப்படும் பொது அது சமந்தமான நோய்கள் குணமாகும் .மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் .
 கொலுசு  
கல்லீரல்,மண்ணீரல்,பித்தப்பை,சிறுநீரகம், சிறுநீர்ப்பை,வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான
அணிகலன் கொலுசு.கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம்தீர்க்கலாம் .
மெட்டி
மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும் .செக்ஸுவல் ஹார்மோன்கள் தூண்டும். பில்லாலி என்பது குழந்தை பிறந்தவுடன் 3வது விரலில் அணியும்போது சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும்

Wednesday, 1 October 2014

தேன் அசல் - நகல் கண்டுபுடிப்பது எப்படி?

சமீப காலமாக நகரத்தின் எல்லா பிரதான ஏரியாக்களிலும் அந்தக் காட்சியைக் காண முடிகிறது. இரண்டு சக்கர வாகனங்களில் பிரமாண்ட அளவிலான தேனடையைச் சுமந்தபடி தேன் வியாபாரம் செய்கிறார்கள் இளைஞர்கள். பரம்பரையாக தேன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களைப் போன்றதான தோற்றம் அவர்களுடையது. அப்போது எடுத்தது மாதிரியான ஃப்ரெஷ்ஷான தேனடையைப் பார்க்கிற மக்களுக்கு, தேவையே இல்லாவிட்டால்கூட தேன் வாங்கும் ஆர்வம் தலைதூக்கும். தேனடையில் இருந்து ஃப்ரெஷ்ஷாக எடுக்கப்பட்ட தேன் எனச் சொல்லி, ஏற்கனவே பாட்டில்களில் நிரப்பி வைத்திருக்கிற தேனை, லிட்டர் 200 ரூபாய் வரைக்கும் விற்கிறார்கள்.

சுத்தமான தேனாச்சே என்கிற நம்பிக்கையில், காசு அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என லிட்டர் கணக்கில் தேன் வாங்கிச் செல்கிறார்கள் மக்கள். கிடைத்தற்கரிய பொருளை வாங்கி வந்து விட்ட மகிழ்ச்சியில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் அடுத்த சில வேளைகளுக்கு தேனாபிஷேகம் செய்யாத குறையாக எல்லா உணவுகளிலும் தேன் சேர்த்துக் கொடுப்பார்கள். இரண்டு, மூன்று நாட்களில் அரை பாட்டிலுக்கும் மேல் காலியாகி இருக்கும். மிச்சமிருக்கும் தேன், மெல்ல தன் சுய ரூபத்தைக் காட்டத் தொடங்கும். கரைந்தும் கரையாமலும் கால் பாட்டிலை அடைத்திருக்கும் சர்க்கரை!


ஆமாம்... அத்தனை நாள் அசல் தேன் போல உங்களை அசத்திய அந்தத் திரவம் தேனே இல்லை. சர்க்கரையும், மைதாவும் சேர்த்த கரைசல். சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்து கேரமலைஸ் (பொன்னிறமான பாகு) செய்யப்பட்டு பிறகு அதில் மைதா கரைசலைச் சேர்த்து அப்படியே தேன் நிறம் மற்றும் பதத்துக்கு மாற்றுகிறார்கள். செயற்கை நிறம் மற்றும் மணத்தையும் சேர்த்து தேன் என்கிற பெயரில் விற்பனை செய்கிற இந்த வியாபார உத்தியில் ஏமாந்து போகிறவர்கள் எக்கச்சக்கம். இந்த போலிக் கரைசல், ஏகப்பட்ட வியாதிகளுக்கு வித்திடுவது தெரியுமா?

மருந்துப் பொருளான தேனை எப்போது, யாருக்கு, எப்படிக் கொடுக்கலாம்? சித்த மருத்துவரிடம் பேசினோம். ‘‘தேன் நல்லதுதான். ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுதான் இதற்கும் பொருத்தம். எந்த வயதில், எந்த அளவில், எந்தப் பொருளுடன் தேனைக் கொடுக்கிறோம் என்பதும் முக்கியம்” என்கிறார் மருத்துவர்

 ‘‘சித்த மருத்துவத்தில் தேனின் பயன்பாடு தவிர்க்க முடியாதது. தேன் நல்லது என்கிற எண்ணத்தில் சிலர் குழந்தைகளுக்கு தினமும் அதைக் கொடுப்பார்கள். அது தவறு. சளித் தொந்தரவு இருப்பவர்களுக்கு தேனுடன் மருந்தைக் கலந்து கொடுக்கும் போது சீக்கிரம் குணம் தெரியும். தேன் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக் கூடியது. குழந்தைகளுக்கு அதீத வயிற்றுப் போக்கு ஏற்பட்டு, சக்தி இழக்கும் போது, தேன் கொடுக்கலாம். தேனில் உள்ள குளூக்கோஸ், ஃப்ரக்டோஸ் போன்றவை குழந்தையின் உடலுக்குத் தேவையான ஆற்றலை உடனடியாகக் கொடுக்கும்.

தேனை எதனுடன் கலந்து கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்து அதன் பலன் வேறுபடும். உதாரணத்துக்கு பலவீனமான, எடை குறைவுடன் காணப்படுகிற குழந்தைகளுக்கு பாலுடன் தேன் கலந்து கொடுத்தால் எடை கூடும். இதை அனுபானம் என்கிறோம். அதுவே வெந்நீரில் தேன் கலந்து குடித்தால் எடை குறையும். மருந்துடன் தேன் சேரும் போது அதன் குணம் வேறு மாதிரி மாறும். தேனை வெறுமனே கொடுப்பதானால் வாரம் ஒரு முறை 1 டீஸ்பூன் அளவுக்குக் கொடுத்தால் போதுமானது. ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம்.

தவறான தேனை உட்கொள்ளும் போது, அதன் பாதிப்புகள் பல விதங்களில் தெரியும். கலப்படத் தேனில் கலக்கப்படுகிற மைதா, சர்க்கரை, செயற்கை நிறமிகள் போன்ற வற்றைப் பொறுத்து சாதாரண அஜீரணம், வயிற்று வலியில் தொடங்கி, உடல் பருமன் உள்ளிட்ட பல பிரச்னைகள் தாக்கலாம். எனவே, சுத்தமான தேன்தானா எனத் தெரிந்து வாங்கி உபயோகிக்க வேண்டியது மிக முக்கியம்” என்கிற டாக்டர் ஹிமேஷ்வரி, தன் அனுபவத்தில் சந்தித்த நிகழ்வு ஒன்றையும் இங்கே சுட்டிக் காட்டுகிறார்.

‘‘நாகர்கோவில் பக்கம் தேன் கூடு வளர்ப்பார்கள். ஒருமுறை அங்கே சென்றிருந்த போது சுத்தமான தேன் கிடைக்குமே என வாங்க நினைத்தேன். அது சீசன் இல்லை என்றும், அப்போது தேன் வாங்குவது சரியானதாக இருக்காது என்றும் சொன்னார்கள். பூக்கள் இல்லாத அந்த சீசனில், சர்க்கரைக் கரைசலைத் தயார் செய்து வைப்பார்களாம். தேனீக்கள் அதைச் சாப்பிட்டு விட்டு, தேனாக மாற்றிக் கொள்ளுமாம். தேனீக்களே உருவாக்குவதுதான் என்றாலும், அது சர்க்கரைக் கரைசல் கொண்டு உருவான செயற்கைத் தேன் என்பதால் ஆரோக்கியமானதல்ல என்றும் அவர்கள் சொன்ன தகவல் அதிர்ச்சியாக இருந்தது.

எனவே, பூக்களில் இருந்து பெறப்படுகிற அசல் தேன்தான் ஆபத்தில்லாதது’’ என்கிற டாக்டர், அசல் தேனைக் கண்டுபிடிக்கும் சில வழிகளையும் குறிப்பிடுகிறார்.



- அசல் தேனில் நல்ல நிறம், மணம், சுவை மூன்றும் இருக்கும். லேசான கசப்புச் சுவை தெரியும். தண்ணீரில் விட்டால் உடனே கரையாது. நிறம் மாறாது. கலப்படத் தேன் என்றால் நிறம் மாறும். கரையும்.

- ஒரு வெள்ளைத்தாளில் ஒரு துளி தேனை விட வேண்டும். அந்தத் தேனை, தேன் ஊற்றப்பட்ட காகிதம் உறிஞ்சாமலும், அந்த வெள்ளைத் தாளில் பரவாமலும் இருந்தால், அது அசல் தேன். ஒரு வேளை, அந்தக் காகிதம், அந்த ஒரு துளி தேனை உறிஞ்சினாலோ அல்லது பரவ விட்டாலோ அந்தத் தேன் கலப்பட தேன் என அர்த்தம்.

- ஒரு தீக்குச்சியின் மருந்துப் பகுதியில் ஒரு துளி தேனை விட்டு, அந்த தீக்குச்சியைக் கொளுத்தவும். உடனே தீப்பற்றி எரிந்தால், அது அசல் தேன். தீக்குச்சி எரியா விட்டால் அது கலப்பட தேன்.






Monday, 8 September 2014

உணவின் அவசியம்!



உணவின் மகத்துவம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

காலை:


காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம்.

சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதுதான் உண்மை.

காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.

மதியம்:


மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும்.
காலை உணவுக்குப் பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதிய உணவை தள்ளிப் போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவுதான் சரியானது. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மதிய உணவை தவற விடாதீர்கள்.

மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். முழு வயிற்றுக்கும் சாப்பிட வேண்டும். தரமற்ற உணவுகள் செரிமானம் ஆகாமல் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது.

இரவு:


இரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது. இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம்.
மற்றொரு ஆய்வு, "பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள டீன்ஏஜ் குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை" என்று கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
இரவு பெரும்பாலும் ஓய்வுதான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது. வேலை செய்பவர்களாக இருந்தால் இரவில் புரோட்டா போன்ற கடினமான உணவுகளை உண்ணலாம். குழந்தைகள், தூங்கச் செல்பவர்களுக்கு சப்பாத்தி, இட்லி போன்ற உணவுகளே போதுமானது.


Sunday, 7 September 2014

மின்சாரத்தை சேமிப்பதர்க்கான வழிகள்



தேவையே இல்லாத நேரத்திலும் வீட்டில் ஃபேன் சுற்றும், லைட் எரியும். இதை நாம் கண்டுகொள்வதே இல்லை. இதில் மிச்சம் பிடித்து என்ன கோட்டையா கட்டப் போகிறோம் என மெத்தனமாகக் கேட்கிறோம்.

ஆனால் மின்னாற்றலைச் சேமிப்பது நமக்கு மட்டுமல்ல நமது நாட்டுக்கே நல்லது. தமிழகம் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க திணறும் நேரத்தில் நாம் சேமிக்கும் சிறு துளி மின்சாரமும் பெரிய வெளிச்சத்தைத் தரும்.
நாட்டின் எரிபொருள் சேமிப்பில் 15 சதவீதத்தைக் குடியிருப்புப் பகுதிகளில் மின்சாரத்தைச் சேமிப்பதன் மூலம் சமாளித்துவிடலாம். ஏசி, ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், லைட், ஃபேன், வாட்டர் பம்பு ஆகியவற்றைச் சிக்கனமாகப் பயன்படுத்தி இதைச் சாத்தியப்படுத்த முடியும்.
மின்சாரத்தைச் சேமிப்பதன் மூலம் காற்று மாசைக் குறைத்து சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். ஏனெனில் இரண்டு சாதாரணமான கார் வெளியேற்றுவதைவிட அதிகமாக ஒரு வீட்டின் மின்சாரப் பயன்பாட்டால் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறும்.

பொதுவாக ஒரு வீட்டின் மொத்த மின் பயன்பாட்டில் 12 சதவீதம் ப்ரிட்ஜுக்கும், 20 சதவீதம் ஏசிக்கும், 8 சதவீதம் விளக்குகளுக்கும், 32 சதவீதம் கீசருக்கும், 28 சதவீதம் பிறவற்றுக்கும் செலவாகிறது. வீட்டில் மின்சாரம் பலவகைகளில் அனாவசியமாகச் செலவாகிறது.
ஏசி பொருத்தப்பட்டுள்ள அறையை முறையாக மூடிவைக்க வேண்டும், அதில் இடைவெளி இருந்தால் அதிக மின்சாரம் செலவாகும் ஆகவே இதைத் தவிர்க்க வேண்டும். சுவிட்சுகளும், நாம் பயன்படுத்தும் முறையும் கூட மின் ஆற்றலை வீணாக்கும் வகையில் அமைந்துவிடும் எனவே இவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வீட்டின் மின் பயன்பாட்டில் 20 சதவீதம் ஏசிக்கு ஆவதால் ஏசியின் பயன்பாட்டை முறைப்படுத்துதல் நல்லது. பசுமையான வெப்பநிலையைத் தரும் வகையில் ஏசி இயங்க வழிசெய்ய வேண்டும். வெப்பநிலையைக் கூட்டும் பொருள்களையோ சாதனங்களையோ ஏசி அறையில் வைக்கக் கூடாது.

ஏசியின் அவுட்டோர் யூனிட்டை மரத்தடி போன்ற நிழலான இடத்தில் வைத்தால் 10 சதவீதம் அளவில் மின் ஆற்றலைச் சேமிக்க அது உதவும். வீட்டைக் கிழக்கு மேற்காக அமைப்பதன் மூலமும் வீட்டைச் சுற்றி மரங்களை வளர்ப்பதன் மூலமும், பசுமைக் கூரை அமைப்பதன் மூலமும், மென்மையான, ஒளிரும் நிற பெயிண்ட்டை வீட்டின் வெளிச் சுவர்களில் பூசுவதன் மூலமும் மின் ஆற்றலைச் சேமிக்கலாம்.
அடுத்து விளக்குகள் பயன்பாடு 8 சதவீத மின்சாரத்தை எடுத்துக்கொள்கிறது. எனவே தேவையில்லாத சமயங்களில் மின் விளக்குகளை ஒளிர விடுதலைத் தவிர்க்க வேண்டும். குண்டு பல்புகள் எனச் சொல்லப்படும் டங்க்ஸ்டன் பல்புகளைத் தவிர்த்து சிஎஃப்எல் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும். வீட்டின் புறத்தில் இரவுகளில் மட்டும் விளக்குகளை ஒளிரவிட வேண்டும். வெளிச்சம் தேவைப்படாதபோது அவற்றை அணைத்துவிடுதல் நல்லது.
பிரிட்ஜ்களின் பயன்பாட்டுக்கு 12 சதவீத மின் ஆற்றல் செலவாகிறது. எனவே ப்ரிட்ஜையும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். அளவுக்கதிகமான குளிர் நிலவும்படி ஃப்ரீஸர்களை வைத்திருத்தல் நல்லதல்ல. கூடுமானவரையில் ப்ரிட்ஜை அடிக்கடி மூடித்திறப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நொடிக்கொரு முறை ப்ரிட்ஜை மூடித் திறந்தால் மின் ஆற்றல் வீணாகும்.

ப்ரிட்ஜுக்கும் சுவருக்கும் இடையே போதிய இடைவெளி இருப்பது அவசியம். இதனால் ப்ரிட்ஜின் மின்சாரத் தேவை குறைய வாய்ப்புள்ளது. உணவுப் பதார்த்தங்களை 36-40 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையிலும், ஃப்ரீஸரை 0-5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையிலும் வைத்துப் பராமரிப்பது நல்லது. ப்ரிட்ஜின் கதவு நன்கு இறுக்கமாக மூடி இருக்க வேண்டும். அதில் இடைவெளி இல்லாமல் இருப்பது அவசியம்.

வாஷிங் மெஷினைப் பொறுத்தவரை எப்போதும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அதாவது அதன் மேக்ஸிமம் லோடு அளவுக்கு துணிகள் இடம்பெற வேண்டும். டிடர்ஜெண்ட் பவுடர் தேவையான அளவு போட வேண்டும். மிக அழுக்கான துணிகளுக்கு மட்டுமே சுடுநீரைப் பயன்படுத்த வேண்டும்.

மின்சார அடுப்பில், தட்டையான அடிப்பாகம் கொண்ட பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும். மின் சாதனங்களை முறையாகக் கையாண்டால் மின் ஆற்றலை சரியான விதத்தில் சிக்கனமாகச் செலவழித்து மின் ஆற்றல் சேமிப்புக்கு நம்மால் ஆன அளவில் உதவ முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Monday, 25 August 2014

புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !





 புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும்.

பல்லுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, எதுக்காக புளூ டூத் ன்னு பெயரை வெச்சாங்க ? எனும் குழப்பம் பலருக்கும் உண்டு. இந்த பெயருக்கும் பல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வார்த்தை பிலாட்டென்ட் அல்லது பிலாட்டன் எனும் ஸ்கான்டினேவியன் வார்த்தையின் ஆங்கில வடிவம்.

பத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க்கையும், நார்வேயின் சில பகுதிகளையும் ஆண்டு வந்த மன்னன் முதலாம் ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன். ஆங்கிலத்தில் அவரது பெயரை ஹெரால்ட் புளூடூத் கோர்ம்ஸன் என்பார்கள். பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாய் சேர்க்கவேண்டுமென முயற்சி எடுத்த மன்னர் அவர் ! அதனால் தான் நமது “இணைக்கும் தொழில்நுட்பத்துக்கும்” அவருடைய பெயரான புளூடூத் எனும் பெயரை வைத்தார்கள். இதுவே சுருக்கமான பெயர் புராணம் !

புளூடூத் சிம்பலை உற்றுப் பார்த்தால் ஒரு “B” தெரியும். அது அவருடைய கையெழுத்தின் பழங்கால ரூனிக் வடிவம் தான் !
புளூடூத் ஒரு குறுகிய எல்லைக்குள் கம்பியில்லா இணைப்பு மூலம் தகவல்களைப் பரிமாற்றும் முறையே. அது நமக்குத் தெரிந்தது தான்.

உதாரணமாக அருகருகே இருக்கும் இரண்டு மொபைல் போன்களிலிருந்து பாடலையோ, படத்தையோ பரிமாறிக் கொள்வது இந்த முறை தான். இதற்காக குறைந்த அலைவரிசையுடைய ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக 2400 முதல் 2480 மெகா ஹெட்ஸ் அளவு !

PAN தெரியுமா என்றால், “தெரியுமே. அதன் விரிவாக்கம் பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர். வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம்.” என்பீர்கள். நல்லது ! புளூடூத் விஷயத்தின் இன்னொரு PAN உண்டு. அது பெர்சனல் ஏரியா நெட்வர்க் என அழைக்கப்படும். பாதுகாப்பான இந்த குறுகிய நெட்வர்க் தான் தகவல் பரிமாற்றத்தின் ஏரியா.

Tuesday, 5 August 2014

ஆன்ட்டிபயாடிக் என்பவை என்ன? அவற்றின் வேலை என்ன? அவற்றை சரியாக எடுத்துக் கொள்ளும் முறை என்ன?



ஆன்ட்டிபயாடிக் விஷயத்தில் அறியாமை வேண்டாம்!

 



கடந்த சில வருடங்களில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியானது வெகுவாகக் குறைந்து வருகிறது. காரணம், நோய்க்கான உண்மையான காரணம்  தெரியாமல் மக்கள் தாமாக செய்து கொள்கிற சுய மருத்துவம். குறிப்பாக ஆன்ட்டிபயாடிக் உபயோகிப்பதில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற  மக்களின் அறியாமை.

உலக அளவில் மருத்துவர்களாலும் நோயாளிகளாலும் ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் 50 சதவிகிதம் தவறாக உபயோகப்படுத்தப்படுகின்றன. 53 சதவிகித  மக்கள் தாமாகவே ஆன்ட்டிபயாடிக் வாங்கி சாப்பிடுகிறார்கள். அவர்களில் 4ல் ஒருவர் அதை முழுமையாக எடுத்து முடிப்பதில்லை. 70 சதவிகித  மருத்துவர்கள் ஜலதோஷம் போன்ற மிகச் சாதாரண பிரச்னைகளுக்குக் கூட அனாவசியமாக ஆன்ட்டிபயாடிக்கை பரிந்துரைக்கிறார்கள்.

50 சதவிகித மருந்துக் கடைக்காரர்கள் மருத்துவர்களின் சீட்டு இன்றி, ஆன்ட்டிபயாடிக் விற்கிறார்கள். இன்னும் இப்படி ஏகப்பட்ட புள்ளிவிவரங்களை  அடுக்குகிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்று. தேவையற்ற நேரத்தில், தேவையற்ற விஷயங்களுக்காக எடுத்துக் கொள்ளப்படுகிற  ஆன்ட்டிபயாடிக், நோய்க்குக் காரணமான கிருமி களை எதிர்த்துப் போராடுவதற்கு பதில், அந்தக் கிருமிகளுக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, அவற்றை  மேலும் பலசாலிகளாக மாற்றிவிடும். பலவகை ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் வீரியமிழந்து வருவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போகவும்  இதுவே முக்கிய காரணம். ஆன்ட்டிபயாடிக் எடுத்துக் கொள்வதில், படித்த, படிக்காத எல்லா மக்களுக்கும் தெளிவோ, விழிப்புணர்வோ இல்லை என்பதே  உண்மை.