Thursday, 26 June 2014

தெரிந்துகொள்வோம்

1. டிவி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் இவற்றை உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது. ரெஃப்ரிஜிரேட்டரில் கம்ப்ரெஸ்ஸரும், டிவியில் பிக்சர் ட்யூபும் ட்யூப் லைட்டில் பாலண்டும் பழுதாகி விடும். நிறுத்திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங்கள் விட்டு மறுபடியும் போடுவது நல்லது.

2. குளிர்சாதனப்பெட்டியைத் துடைக்கும்போது பச்சைக்கற்பூரம் கலந்த நீரினால் துடைத்தால் பூச்சிகள், சிறு வன்டுகள் உள்ளே நுழையாது.

3. கறுத்துப்போன வெள்ளி சாமான்களை தாம்பூல சுண்ணாம்பு கொண்டு தேய்த்தால் பளபளவென்று ஆகி விடும்.

4. சர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களைப் போட்டு வைத்தால் எறும்புகள் சீனியை மொய்க்காது.

5. சில வகை தண்ணீரில் துணிகள் துவைக்கும்போது துணிகள் பழுப்பாகி விடுகின்றன. இதற்கு அவற்றை சோப் பவுடரில் ஊறவைக்கும்போது 2 மேசைக்கரண்டி கல் உப்பும் சேர்த்து ஊறவைத்தால் துணிகள் பழுப்பு நிறம் நீங்கி பளிச்சென்றாகி விடும்.

6. ம‌ர‌ச்சாமான்க‌ளை பாலீஷ் செய்வ‌த‌ற்கு, முத‌லில் அவற்றை வினீகர் கலந்த நீரால் கழுவி, துடைத்து காய வைத்து பிற‌குதான் பாலீஷ் பூச வேண்டும்.

7. மூட்டைப்பூச்சி தொந்தரவிற்கு, கட்டிலின் நான்கு கால்களிலும் சூடம் அல்லது புரசம் பூவை வைத்து கட்டி வைக்க வேண்டும். தலையணை, மெத்தை இவற்றில் கற்பூரத்தைத் தூள் செய்து தூவலாம்.

8. தோல் பொருள்க‌ளின் நிற‌ம் ம‌ங்காதிருக்க‌, அவ‌ற்றின் மீது லின்ஸிட் ஆயில் என‌ப்ப‌டும் ஆளி விதை எண்ணையைப் பூசி துடைக்க‌ வேண்டும்.

9. ஈக்க‌ள் அதிக‌ம் உள்ள‌‌ இட‌த்தில் தூவக்காலில் நெருப்பிட்டு கிராம்புத்தூளைத் தூவினால் ஈக்கள் பறந்து விடும்.

10. மெழுகுவ‌ர்த்தி அதிக‌ வெளிச்ச்ச‌ம் த‌ர‌, அதை ஒரு பாத்திரத்தில் நிற்க வைத்து அதன் அடியில் தண்ணீர் ஊற்றி எரிய விடவும். உப்பில் புதைத்து வைத்தும் எரிய விடலாம்.

Saturday, 21 June 2014

பிளாஸ்டிக்கேன் குடிநீரில் புற்றுநோய் அபாயம்...!!! ( BOTTEL CAN WATER IS INJURIOUS TO HEALTH)

பிளாஸ்டிக்கேன் குடிநீரில் புற்றுநோய் அபாயம்...!!!

நண்பர்களுக்கு கண்டிப்பாக பகிருங்கள்...!!!

வெயில் படும் போது, பிளாஸ்டிக்கில் இருந்து தண்ணீருக்குள் செல்லும் "டயாக்ஸின்” நச்சுப்பொருளால், புற்றுநோய் உட்பட பல்வேறு நோய் அபாயம் ஏற்படுகிறது. எனவே வெயிலில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கேன்களை வாங்கி குடிக்காதீர்கள், என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில், குடிநீர் முழுக்க பிளாஸ்டிக் கேன்களிலேயே விநியோகம் செய்யப்படுகிறது. கடைகளில் ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் பாட்டில்களிலும், வீடுகளுக்கு 20 லிட்டர் கேன்களிலும், சப்ளை செய்யப்படுகிறது. பிளாஸ்டிக் அபாயம் உணர்ந்த பெரிய கம்பெனிகள் தங்களது தயாரிப்புகளை அட்டைப்பெட்டிக்குள் அடைத்து பக்குவமான முறையில் சப்ளை செய்கின்றனர். கடைக்காரர்களுக்கு, அதன் அபாயம் புரியவில்லை. எனவே கேன்களை கடை முன் வெயிலில் அடுக்கி வைக்கின்றனர். அதேபோல் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும், பிளாஸ்டிக் கேன்களையும் வேன்களில் ஏற்றி பல மணி நேரம் அந்த வேன்களை வெயிலில் நிறுத்தி விடுகின்றனர். பிரச்னை இங்கு தான் தொடங்குகிறது. வெயிலில், சில மணி நேரம் பிளாஸ்டிக் கேன்களை வைத்திருக்கும் போது, பிளாஸ்டிக்கில் இருந்து, "டயாக்ஸின்” என்ற நச்சுப்பொருள் வெளியேறி குடிநீரில் கலந்து விடுகிறது. இந்த நீரை குடித்தால், புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் உடல் உபாதைகள் ஏற்படும், அபாயங்கள் உள்ளன.
: "டயாக்ஸின்” நச்சுப்பொருள் பிளாஸ்டிக் கேன்களின் வெயில் படும் போதெல்லாம் உருவாகும். இந்த நச்சுப்பொருள் கேனின் தன்மைக்கும் தரத்திற்கும், ஏற்ப அதிகமாகவோ, குறைவாகவோ உருவாகும். எவ்வளவு நச்சு உருவானாலும், இதனை குடிப்பதால் ஆபத்து தான்.இதனால் பிளாஸ்டிக் கேன்களை வெயில் படாத இடங்களில் வைத்து பயன்படுத்த வேண்டும். நம்மிடம் அந்த கேன் வந்து சேரும் முன் பல மணி நேரம் வெயிலில் இருந்திருந்தால், அதற்கு யார் பொறுப்பு. அது நமக்கு தெரியாமல் போகும். எனவே முடிந்த அளவு பிளாஸ்டிக் கேன்களை தவிர்த்து விட்டு, கண்ணாடி அல்லது சில்வர் பாட்டில்களை பயன்படுத்துவது சிறந்தது.
அதேபோல், கார்களை வெயிலில் நிறுத்தியிருக்கும் போது, காருக்குள் இருக்கும் பிளாஸ்டிக்கில் இருந்து "பென்சீன்” என்ற வேதிப்பொருள் உருவாகி காருக்குள் உள்ள காற்றில் கலந்திருக்கும். நாம் காருக்குள் அமர்ந்து உடனே "ஏசி”யை ஆன் செய்து, கார் கதவுகளை மூடி விட்டால், அந்த நச்சு கலந்த காற்று வெளியேற வழியின்றி, நம் உடலுக்குள் சென்று பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும். எனவே காரை வெயிலில் நிறுத்தினால், சிறிது நேரம் "ஏசி”யை ஆன் செய்து, காருக்குள் உள்ள நச்சு காற்று முழுவதும் வெளியேறும் வரை கதவுகளை திறந்து வைத்திருக்க வேண்டும்.

தெரிந்துகொள்வோம்(DO YOU KNOW?)

தெரிந்துகொள்வோம் :