Sunday, 13 July 2014

உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்.... ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்.....


உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்.... ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்.....


நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான,




~~~PASSPORT


~~~DRIVING LICENCE,


~~~PAN CARD,


~~~VOTER ID,


~~~RATION CARD,


~~~BANK PASSBOOK,


~~~ATM CARD


 முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள POST BOX - ல் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும்.

உதவும் மனப்பான்மை கொண்ட, நல்ல உள்ளங்கள் இதனை அதிகமாக SHARE செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதனை SHARE செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை SHARE செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...... ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திடவேண்டாம்.

அக்கறையுடன் இதனை SHARE செய்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..


Friday, 11 July 2014

குறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்




இன்றைய காலத்தில் நிறைய மக்கள் குறட்டையினால் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர். இத்தகைய குறட்டையை நிறுத்த நினைத்தாலும், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம்மை அறியாமலேயே குறட்டையானது வந்துவிடுகிறது. இதனால் நம்முடன் படுப்பவர்கள் பல நாட்கள் தூக்கத்தை தொலைத்துவிடுகின்றனர். பொதுவாக குறட்டை என்பது ஒரு கோளாறு. இது குரல் வளையில் காற்றானது அளவுக்கு அதிகமாக செல்லும் போது, அதிகப்படியான ஒலியை உண்டாக்குகிறது. அதிலும் காற்றானது வாய் மற்றும் மூக்கின் வழியாக இடையூறுடன் செல்லும் போது அது பலத்த ஒலியை உண்டாக்குகிறது. குறிப்பாக சளி அல்லது மூக்கடைப்பின் போது இந்த மாதிரியான சப்தம் ஒலிக்கப்படும். மேலும் குறட்டையானது வயது, சைனஸ், அதிகப்படியான உடல் எடை மற்றும் புகைப்பிடித்தல் ஆகிறவற்றின் காரணமாகவும் ஏற்படும். இப்படி குறட்டை விட்டால், அது உடல் நலத்தைப் பாதிப்பதோடு, உறவுகளில் தொல்லையை உண்டாக்கும். ஆகவே அந்த குறட்டையை நிறுத்துவதற்கு ஒருசில எளிய வழிகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.
 
         * தலையணை படுக்கும் போது தலையணை பயன்படுத்தாமல் சாதாரணமாக படுப்பதற்கு பதிலாக, சற்று அதிக அளவில் தலையணையைப் பயன்படுத்தி தூங்கினால், குறட்டையை தவிர்க்கலாம்.

·         *  பக்கவாட்டில் தூங்கவும் இப்படி இரவு முழுவதும் படுப்பது சாத்தியம் இல்லை தான். இருப்பினும் இப்படி பக்கவாட்டில் படுத்தால், அது குறட்டையை தடுக்கும்.

·         


* நீராவிப் பிடிப்பது ஆவிப் பிடித்தாலும், குறட்டை வருவதை தவிர்க்கலாம். ஏனெனில் இது மூக்கில் உள்ள அடைப்புக்களை நீக்கி, காற்று எளிதாக செல்ல வழிவகுக்கும்.





*      புகைப்பிடிப்பதை தவிர்ப்பது புகைப்பிடித்தால் உடலுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் ஒன்று தான் குறட்டை விடுவது. ஏனெனில் புகைப்பிடிக்கும் போது, அது தொண்டையில் புண் மற்றும் வீக்கங்களை உருவாக்குவதால், அது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும்.





*    மது அருந்துதலை நிறுத்துவது மது அருந்துவது, தூக்க மாத்திரைகளை உட்கொள்வது போன்றவற்றை நிறுத்தினால், அது தசைகளை தளர்வடையச் செய்து, காற்றை எளிதாக செல்ல உதவும்.


*     சளிக்கு நிவாரணம் அளித்தல் சளி அல்லது ஜலதோஷம் பிடித்தால், அதற்கு உடனே சரியாக சிகிச்சை அளித்து வந்தால், குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம்.

·        



 * தூங்கும் நேரம் ஸ்நாக்ஸ் வேண்டாம் இரவில் தூங்கும் போது பிட்சா, பர்கர், சீஸ் பாப்கார்ன் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால், அது சளியின் உற்பத்தியை அதிகரித்து, குறட்டைக்கு வழிவகுக்கும். எனவே கொழுப்புச்சத்துள்ள உணவுப் பொருட்களை இரவில் தவிர்ப்பது நல்லது.

Thursday, 10 July 2014

ஆண்கள், பெண்களுக்கு தலை வழுக்கை – மீண்டும் முடி வளர என்ன செய்யலாம்?




நம் உடம்பில் ஐந்து மில்லியன் முடிகள் உள்ளன. தலையில் மட்டும் எண்பதாயிரம் முதல் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் முடிகள் உள்ளன. புரோட்டின் சத்தில் உள்ள கேரட்டின் என்கிற மூலப்பொருள்தான் முடிகள் வளர்வதற்குக் காரணமாக இருக்கிறது. புரோட்டின் சத்து குறைந்தால், முடி அதிகமாக உதிரும். நம் உடம்பில் எத்தனை முடி இருக்கிறதோ, அவற்றுக்கான அடித்தண்டு (follicies), தாயின் வயிற்றில் இருக்கிற போதே தோன்றி விடுகிறது. பிறப்பிற்குப்பின் புதிய முடி வளர்வதற்கான அடித்தண்டு எதுவும் தோன்றுவதில்லை.
வழுக்கை பரம்பரையாக ஏற்படுவது என்பது தவறான கருத்து. இதற்கு ஐம்பது சதவிகித வாய்ப்புகளே உண்டு. தலையில் ஏற்படும் பொடுகினாலும் தலைமுடி பலமிழந்து போகலாம்.


மனஉளைச்சல் காரணமாகவும் தலைமுடி சரமாரியாக விழலாம். மஞ்சள் காமாலை, மலேரியா, டைபாயிட் போன்ற நோய்கள் வந்தாலும் தலைமுடி உதிரும்.
சிகரெட் பிடிப்பதும், தலைமுடி உதிர்வதற்கு ஒரு முக்கியமான காரணம். கைகால் வலிப்பு நோய்க்கான மருந்துகளைச் சாப்பிடும்போது, உயர் ரத்த அழுத்தம் தொடர்பான மாத்திரைகளைச் சாப்பிடும்போது, சில வகையான நோய் எதிர்ப்புச் சக்தி தரும் மாத்திரைகளை சாப்பிடும்போதும் தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும்.
பெண்களின் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால்தான் தலைமுடி நிறைய கொட்டும் வாய்ப்பு உண்டு. பெண்கள் பூப்படைந்தவுடன், அதாவது 12 முதல் 14 வயதுக்குள் நிறைய தலைமுடி இழக்கலாம்.
பிரசவம் முடிந்த சில மாதங்களுக்குள் நிறைய தலைமுடி கொட்டலாம். நாற்பத்தைந்து வயதில் மாதவிடாய் நிற்கிறபோதும் தலைமுடி உதிரலாம்.
ஊட்டச்சத்து குறைவாக இருக்கும்போது, முடி உதிர்கிறது. உதாரணமாக, நம் ரத்தத்தில் இரும்புச் சத்து குறைந்தால், முடி அதிக அளவில் உதிரும். பெண்களுக்கு ஹேமோகுளோபின் எண்ணிக்கை பன்னிரண்டோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்க வேண்டும்.

தலைமுடி மீண்டும் வளர



* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

* வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

* இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

* முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

* காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

* தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

* செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

* நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

* முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

* முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

* காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

* சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

* புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.